இன்று நடைபெற்ற முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரின்; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 19 ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணி சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதையடுத்து 151 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 55 ஓட்டங்களைப் பெற்றிருந்தநிலையில் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் போட்டி மீண்டும் ஆரம்பமாகி 14.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 121 ஓட்டங்களை பெற்ற நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆடுகளம் ஈரமாகி பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து டக்வொர்த் லீவிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கு 14.4 ஓவர்களில் 103 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என கணிக்கப்பட்டது. இந்தநிலையில் அஸ்திரேலிய அணி ஏற்கனவே 121 ஓட்டங்களைப் எடுத்திருந்ததால், 19 ஓட்ட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம், முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி ஐ.சி.சி. தரவரிசையிலும் முதலிடத்திற்கு முன்னேறியது.