குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டலோனியாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்னா கப்ரியலை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்பெய்னின் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. கட்டலோனிய சுதந்திரப் பிரகடனம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு அன்னா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகத் தவறியதனால் அன்னாவிற்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்னா தற்போது சுவிட்சர்லாந்தில் தங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தாம் ஸ்பெய்னுக்கு சென்று நீதிமன்றில் முன்னிலையாகப் போவதில்லை எனவும், வழக்கு விசாரணைகளில் ஒரு போதும் நீதிக் கிடைக்காது எனவும் அன்னா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது