தமிழகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத 8 கிராமங்களை தத்தெடுக்க நடிகர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இன்றைய தினம் கமல் சென்னை திரும்பியதும் இதற்கான ஆரம்ப கட்டபணிகள் ஆரம்பிக்க்பபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் எனவும் அவர்கள் தன்னுடன் கைகோர்ப்பார்கள் எனவும் தெரிவித்துள்ள அவர் தனது அரசியல் பயணம் நற்பணிகள் மூலமாகவே மக்களை எளிதாக சென்றடைய முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கமையவே முதல் கட்டமாக தமிழகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத 8 கிராமங்களை தத்தெடுக்க் முடிவு செய்துள்ளா அவர் இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகம் முழுவதும் உள்ள தனது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 16 உயர் மட்ட குழு உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் இந்த 8 கிராமங்களும் தேர்வு செய்யப்பட உள்ள. இந்த கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தனது கட்சி சார்பில் முழுமையாக செய்து கொடுக்கவும் கமல் திட்டமிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து இன்று சென்னை திரும்பும் கமல் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது