177
நடிகர் கமல் ‘ஹாசன் தொடங்கியுள்ள கட்சி குறித்து கருத்து தெரிவித்த பிரபல நடிகை கஸ்தூரி, மொத்த ‘பிக் பாஸ்’ டீமும் அரசியலில் இறங்கியிருக்கு என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன், அரசியலில் ஈடுபடும் முகமாக ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து வெள்ளை நிறத்தில் இணைந்த கைகளின் மத்தியில் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து ஊடகங்களில் பல விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. சிலர் கமலை ஆதரித்துள்ளதுடன் சில பிரபலங்கள் கமலை கிண்டல் செய்தும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நடிகை கஸ்தூரி, அரசியல், சமூகம், பெரியாரியம், ஈழ விடுதலை என பல்வேறு தளங்களில் பன்முகப்பட்ட – ஆழமான பார்வையைகொண்டவர். தமிழக ஊடங்களில் பல துணிச்சலான கருத்துக்களை கூறி வருபவர்.
இந்தநிலையில் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த கஸ்தூரி ”சினேகன், வையாபுரி, ஸ்ரீபிரியா, விஜய் டிவி மகேந்திரன்.. மொத்த பிக் பாஸ் டீம் இறங்கியிருக்கு. விவோதான் ஸ்பான்ஸரா? எலிமினேஷன் கூட வரும்ல” என்று கிண்டலாக பதிவு ஒன்றினை எழுதியுள்ளார்.
Spread the love