149
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை உத்தரவு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 26ம் திகதி வரை இந்த தடை நீக்க உத்தரவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது
ரஸ்யா மற்றும் நேபாளம் செல்வதற்காக அனுமதி கோரியநிலையிலேயே நீதிமன்றம் இவ்வாறு தடையுத்தரவை தற்காலகமாக நீக்கியுள்ளது. 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love