கிளிநொச்சி மற்றும் தென்மராய்ச்சி கல்வி வலயங்களுக்கான 2018 ஆம் ஆண்டிற்கான சாரணர்களுக்கான ஒன்றுகூடலானது கிளிநொச்சி மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் 19.02.2018 அன்று திங்கட்கிழமை பி.ப 3.00 மணிக்கு மாவட்ட சாரண ஆணையாளரும், கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் அதிபருமாகிய திரு.கி.விக்கினராஜா தலைமையில் கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் ஆரம்பமாகி நேற்று சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வுடன் நிறைவு பெற்றது
இவ் சாரணர்களின் ஒன்றுகூடல் நிகழ்விற்கு கிளிநொச்சி கல்வி வலயத்திலிருந்து பத்துப் பாடசாலைகளும், தென்மராய்ச்சி கல்வி வலயத்திலிருந்து ஆறு பாடசாலைகளிலிருந்தும் மொத்தம் 364 சாரண மாணவர்களில் 307 ஆண் சாரண மாணவர்களும், 57 பெண் சாரண மாணவர்களும் கலந்து கொள்கின்றனர்.இதில் அதிகளவான ஆண் ( 53 )மற்றும் பெண்(29) சாரண மாணவர்கள் கிளிநொச்சி இந்துக்கல்லூரியிருந்து பங்கு பற்ரியிருன்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் 25 சாரண ஆசிரியர்களும், 10 வளவாளர்களும் பங்குபற்ரியிருன்தனர்
இவ் ஒன்று கூடலில் சாரண மாணவர்களுக்கான கூடார ஒழுங்கமைப்பு மற்றும் விசேட பயிற்சிகள்,அணிநடை வகுப்பு,விளையாட்டுகள்,தீப் பாசறை நிகழ்வு என்பன சிறப்பாக இடம்பெற்று இருந்ததுடன் . இச் சாரணர் ஒன்று கூடல் நிகழ்வின் இறுதிநாளான சாரண அமைப்பின் தந்தை பேடன் பவல் அவர்களின் தினத்தில் 22.02.2018 நேற்று கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பி.ப 2.00 மணியளவில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.