குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
தென்கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் இறுதி நிகழ்வில் வடகொரிய இராணுவ ஜெனரல் பங்கேற்க உள்ளார். வடகொரிய இராணுவத்தின் அதி உயர் பதவிகளில் ஒன்றை வகித்து வரும் ஜெனரல் கிம் யொங் சோல், இந்த இறுதி நிகழ்வில் பங்கேற்க உள்ளார். வடகொரிய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றி வருகின்ற ஜெனரல் கிம் தென்கொரியாவிற்கு எதிரான பல்வேறு தாக்குதல்களை திட்டமிட்டிருந்தார் என நம்பப்படுகின்றது.
வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலைமை காணப்பட்டு வந்தநிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் முன்னேற்றம் பதிவாகியுள்ளது. முன்னதாக குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஆரம்ப நிகழ்வில் வடகொரிய தலைவர் கிம் ஜொங்கின் சகோதரி பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.