மெல்டோனியம் என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்திய தடகள வீரருக்கு நான்கு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 400 மீற்றர் ஓட்டப் பந்தய வீரரான ஜித்தின் போல் (Jithin Paul)என்பருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு மையத்தில் இவர் தங்கியிருந்த அறையினை சோதனையிட்ட ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் அதிகாரிகள் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தான மெல்டோனியத்தினை அவரது அறையில் இருந்து கைப்பற்றியுள்ளனர். இதனால் தேசிய ஊக்க மருந்து தடை அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஜித்தின் போலுக்கு நான்கு ஆண்டுகள் தடைவிதித்துள்ளது.
ஜித்தின் போல் போட்டிக்கு முன்னரோ, போட்டிக்கு பின்னரோ ஊக்கமருந்தை உட்கொள்வில்லை எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை இந்திய தடைகள வீரர் ஒருவருக்கு ஊக்கமருந்து விவகாரத்தில் தடை வழங்குவது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது