164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் எரிபொருளக்கு தட்டுப்பாடு கிடையாது என பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. வழமையான முறையில் பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. சில தரப்பினர் நாட்டின் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்களை பரப்பி வருவதாகவும் இதில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எவ்வித தடையும் இன்றி பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை மக்கள் நம்பக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love