ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரும் ஐ.நாவின் அபிவிருத்தி வேலைத்திட்ட வதிவிடப் பிரதிநிதியுமான ஊனா மக்கொலி, நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. 54 வயதான ஊனா மக்கொலி மக்களுக்கு சேவையை செய்வதில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என, ஐ.நா வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு துயரம் அனுஷ்டிக்கிறது எனவும் ஐ.நா வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கொலி, மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மருத்துவ விடுப்பில் இருந்து வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையின் முதலாவது பெண் ஐ.நா வதிவிட ஒருங்கமைப்பாளரான திருமதி மக்கொலி, தைரியமும் உறுதியும் கொண்ட ஒரு தலைவராவார் எனவும் அதி சிரேஷ்ட ஐ.நா உத்தியோகத்தரான மக்கொலி, 21 வதிவிட, வதிவிடமல்லா ஐ.நா முகவரகங்களை கொண்ட குழுவுக்கு தலைமை தாங்கியதுடன் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இலங்கைப் பிரதிநிதியாகவும் கடமையாற்றியுள்ளார்.
மேலும்இலங்கையில் ஆறு வருடங்கள் கடமையாற்றியிருந்த ஊனா மக்கொலி இரண்டு வருடங்கள் ஐ.நா வதிவிட ஒருங்கமைப்பாளரகவும் பின்னர் ஐ.நா அபிவிருத்தி வேலைத்திட்ட இலங்கைப் பிரதிநிதியாகவும் கடமையாற்றியிருந்தார்.
அதற்கு முன்னர் அவர் பனாமா மற்றும் டோகோ நாடுகளில் யுனிசெப் பிரதிநிதியாகவும் சூடான், கென்யா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளில் யுனிசெப் அலுவலராகவும் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அயர்லாந்து, ஐக்கிய இராட்சியத்தை தனது சொந்த ஊராக கொண்டிருந்த இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.