பஞ்சாப் நஷனல் வங்கியில், நகை வியாரபாரியான நிரவ் மோடி, மோசடி பண பரிவர்த்தனை செய்து 11,500 கோடி ரூபாய் மோசடி செய்தமை குறித்த குற்றச்சாட்டு வெளிவந்துள்ள நிலையில் அதே போன்ற மற்றுமொரு மோசடி தற்பொழுது வெளியாகியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த தங்க மற்றும் வைர நகை வியாபாரியான துவாரகா தாஸ் சேத் இண்டர்நேஷனல் நிறுவனம், ஒரியண்டல் பாங்க் ஒப் கொமர்ஸ் என்ற பொதுத்துறை வங்கியில் 389.85 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. நிரவ் மோடி செய்ததை போலவே வைர மற்றும் தங்க நகையை ஏற்றுமதி செய்தற்கு தவறான முறையில் லெட்டர் ஒப் கிரெடிட் எனப்படும் போலியான ஆவணங்களை வழங்கி மோசடியாக பண பரிமாற்றம் செய்துள்ளமை தற்பொழுது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக வங்கி அளித்துள்ள முறைப்பாட்டின் பேரில் துவரகா தாஸ் சேத் இண்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்களான சபயா சேத், ரீட்டா சேத், கிருஷ்ண குமார் சிங், ரவி சிங் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 2007 முதல் 2012ம் ஆண்டு வரை இந்த மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது