சினிமாவில் தன்னுடைய இரண்டாவது ஆட்டத்தினை ஆரம்பித்துள்ள நடிகை ஜோதிகா தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான நாச்சியார் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ஜோதிகா தற்பொழுது மணிரத்னத்தின் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். அதனைத் தொடர்ந்து தும்ஹாரி சுலு என்ற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜோதிகா வானொலி அறிவிப்பாளராக வரும்நிலையி;ல் உங்கள் ஜோ என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராதா மோகன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் இறுதியில் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தலைவியான வானொலி அறிவிப்பாளர் ஒருவர் எதிர்நோக்கும் சவால்கள் குறித்ததே இந்தப்படமாகும். ஹிந்தி படத்தில் இநதப் பாத்திரத்தில் நடிகை வித்யாபாலன் நடித்திருந்தாh என்பது குறிப்பிடத்தக்கது.