158
லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை அவரது பாதுகாப்பு கருதியே நாட்டுக்கு அழைத்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
கடந்த சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில் நாட்டுக்கு அழைக்கப்பட்ட அவர் கடந்த 22ம் திகதி இலங்கையை சென்டைறடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love