மியன்மரின் ரக்கைன் மாகாணத்தின் தலைநகரான சிட்வேயில் இன்று அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்குண்டுவெடிப்பில் ஒரு காவல்துறை அதிகாரி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குண்டுத்தாக்குதல் யாரால் மேற்கொள்ளப்பட்ட என்பது பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
3 குண்டுவெடிப்புகளில் ஒன்று உள்ளூர் அதிகாரி ஒருவரின் வீட்டின் அருகேயும் மற்றொன்று நீதிமன்றம் அருகிலும், மூன்றாவது பதிவு அலுவலகம் அருகிலும் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்ற ரக்கைன் மாகாணத்தில் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு வருபவர்கள் காவல்துறையினரின் சோதனைச் சாவடிகளின்மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவத்தின் தீவிரம் அடைந்திருந்த நிலையில் சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டைநாடான பங்களாதேசில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது