குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் குடும்பத்தினரையும் பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் குளோபல் தமி; போராம் அமைப்பு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி வரும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, அண்மையில் சுதந்திர தின நிகழ்வின் போது, புலம்பெயர் தமிழர்களை கழுத்து அறுத்து கொலை செய்வதாக சைகை மூலம் காண்பித்திருந்தார்.
இந்த சைகை விவகாரம் பெரும்; சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன், அண்மையில் பிரிகேடியர் பிரியங்க மீளவும் நாட்டுக்கு அழைக்கப்பட்டார். எனினும், பிரிகேடியரின் குடும்பத்தினர் தொடர்ந்தும் பிரித்தானியாவில் தங்கியிருப்பதாகவும் அவர்களையும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமெனவும் குளோபல் தமிழ் போரம் அமைப்பு கோரியுள்ளது. பிரிகேடியரின் வீசா ரத்து செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.