குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனாவின் மூன்று காப்புறுதி நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டுச் சட்டங்களை மீறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சீனாவின் காப்புறுதி கட்டுப்பாட்டு நிறுவனம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. பிங் என்ட் இன்சுரன்ஸ் நிறுவனம், நியூ சைனா லைப் இன்சுரன்ஸ் நிறுவனம் மற்றும் சைனா ரீ எசட் மெனேஜ்மன்ட் ஆகிய நிறுவனங்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறான தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை என்ற போதிலும் முதலீட்டுச் சட்டங்களை மீறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காப்புறுதி துறையில் காணப்படும் ஆபத்துக்கள் காரணமாக இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது