நடிகை ஸ்ரீதேவியின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. ஸ்ரீதேவி டுபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். அதே போல் சக நடிகர்கள், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்திய திரையுலகையே கலக்கிய சிவகாசி பெண்.. சென்று வாருங்கள் ஸ்ரீதேவி! இவர் தமிழில் எப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனாரோ அப்படித்தான் மற்ற மொழிகளிலும் பிரபலம் ஆனார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளும் நடித்துக் கொண்டு இருந்தார். பல படங்களில் ஆண் குழந்தை வேடத்திலும், சிறு கடவுள் வேடத்திலும் நடித்தார். அதேபோல் பெரிய ஹீரோயினாக வளர்ந்த பின் கமல்ஹாசன், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், விஜய் என முன்னாடி ஹீரோக்கள் எல்லோருடனும் நடித்துள்ளார். கமல், ரஜினி, ஸ்ரீதேவி ஜோடி 80களில் இந்திய திரையுலகையே ஆட்டிபடித்துக் கொண்டு இருந்தது. எல்லா மாநிலத்திற்கும் இந்தியா முழுமைக்குமான ஹீரோயினாக இவர் இருந்தார். தென்னிந்தியர்களை வடஇந்தியர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்ற பிம்பத்தை நொறுக்கினார். 15 வருடம் இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தார். முக்கியமாக இந்த சிவகாசி அழகியை பொலிவூட் தூக்கி சுமந்தது. எத்தனை எத்தனை விருதுகள் அதேபோல் இவர் சிறிய சிறிய மாநில விருதுகள், பிலிம் பேர் விருதுகள் என பல விருதுகள் வாங்கி இருக்கிறார். 2013ல் பத்ம விருது வாங்கினார். அதேபோல் கேரளா அரசு இவருக்கு பலமுறை விருது வழங்கி சிறப்பித்து இருக்கிறது. 16 வயதினிலே மயில், ஜானி அர்ச்சனா, மூன்றாம் பிறை விஜி திரைப்படங்களில் தாம் ஏற்ற அத்தனை கதாபாத்திரங்களிலும் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி 1970களின் இறுதியிலும் 1980களிலும் தமிழ் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரீதேவியை 1976-ம் ஆண்டு மூன்று முடிச்சு படத்தில் செல்வி கதாபாத்திரம் மூலமாக நாயகியாக்கினார் இயக்குநர் கே. பாலச்சந்தர். அப்போது ஸ்ரீதேவிக்கு வயது 13. நடிகை ஸ்ரீதேவியின் மரணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளர். தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட முண்ணனி நடிகர்களின் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர். தமிழ் மண்ணிற்கு தலை வணங்குகிறேன். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பல்வேறு மொழிகளில் நடித்து பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் ஈடு இணையற்ற நடிப்புத் திறன் கொண்டவர். அவரின் திரைப்படங்களே அதற்கு சாட்சி. ஸ்ரீதேவியின் மரணச்செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் . அவரின் திரைப்படங்கள் மூலம் எப்போதும் நினைவு கொள்ளப்படுவார் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் மரணச்செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், துயரமும் அடைந்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி இப்போது இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.. சச்சின் டெண்டுல்கர், அஸ்வின் மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது… ஸ்ரீதேவியின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, நடிகர் ரஜினி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசனும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான்.
பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த மறைவு செய்தி தன்னை துன்பத்தில் ஆழ்த்துவதாகவும், பழைய நினைவுகள் நினைவுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் இந்த மறைவு திரை உலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஜினியுடன் ஜோடியிட்டு கலக்கிய ஸ்ரீதேவி
ரஜினிகாந்துடன் ஸ்ரீதேவி 22 படங்களில் நடித்து கலக்கியுள்ளார். கமல்ஹாசனை போல் 6 வயது முதல் நடித்து வந்த ஸ்ரீதேவி முதல் முறையாக ரஜினியுடன் மூன்று முடிச்சு படத்தில் 1976-ஆம் ஆண்டு நடித்துள்ளார். கமல் என்றால் ஸ்ரீதேவி.. பிரிக்க முடியாத ஒரு ஜோடி! தமிழ் சினிமாவில் ரசிகர்களை வசீகரித்த ஜோடிகள் வரிசையில் கமல் – ஸ்ரீதேவிக்கு தனி இடம் உண்டு. அந்த அளவுக்கு இருவரும் இணைந்து கொடுத்த நடிப்பு தீனியை அவர்களுக்குப் பின்னர் யாருமே கொடுத்ததில்லை. இருவரும் இணைந்து 24 படங்களில் நடித்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை தமிழ்ப் படங்கள். இருவரும் இணைந்து கொடுத்த அத்தனை படங்களும் இருவரின் பன்முக தன்மைக்காக பெரிதும் பேசப்பட்ட பிரமாண்டப் படங்கள் என்பது முக்கியமானது. மறக்க முடியாத மூன்று முடிச்சு
1976ம் ஆண்டு வெளியான மூன்று முடிச்சுதான் இருவரும் இணைந்து ஜோடியாக நடித்த முதல் படம். இதில் இன்னொரு ஹீரோவாக, நெகட்டிவ் ரோலில் ஜொலித்தவர் ரஜினிகாந்த். கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான இப்படம் மிகப் பெரிய ஹிட்டாக அமைந்ததோடு, ஸ்ரீதேவி என்ற ஹீரோயினின் நடிப்புப் பரிமாணத்தைப் பார்த்து அனைவரையும் வியக்க வைத்தது.
மயிலு ஸ்ரீதேவி
கமல், ரஜினி ஆகிய இரு ஆளுமைகளையும் இதில் தூக்கிச் சாப்பிட்டிருப்பார் ஸ்ரீதேவி. அதன் பிறகு இருவரும் இணைந்து மிரட்டிய படம் 16 வயதினிலே. தமிழ் சினிமாவை நிஜ கிராமங்களுக்கு முதல் முறையாக கூட்டிச் சென்ற புதுமைப் படம். பாரதிராஜா, இளையராஜா போன்ற ஆளுமைகளோடு, கமலும், ஸ்ரீதேவியும் இணைந்து வெளுத்துக் கட்டிய மறக்க முடியாத படம்.
புதிய ஒளி பாய்ச்சிய சிகப்பு ரோஜாக்கள்
பிறகு வெளியான சிகப்பு ரோஜாக்கள், கமல் – ஸ்ரீதேவி மீது புதிய ஒளியைப் பாய்ச்சியது. மனிதரில் இத்தனை நிறங்களா, சக்கைப் போடு போடு ராஜா, தாயில்லாமல் நானில்லை என இவர்களின் நடிப்பு வேட்டை தொடர்ந்தது.
ஹிட் கொடுத்த கல்யாண ராமன்
தொடர்ந்து இருவரும் நடித்த படங்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த படமாக கல்யாண ராமன் 1979ல் வெளியானது. தொடர்ந்து ஹிட் கொடுத்த முக்கியப் படம் வறுமையின் நிறம் சிவப்பு. இருவரது நடிப்புக்கும் புதிய அர்த்தம் கொடுத்த படம் இது. அதையடுத்து வெளியானது குரு. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பிரமாண்ட ஹிட்டான படம் குரு.
சின்னஞ்சிறு வயதில்
கமல் -ஸ்ரீதேவி நடிப்பில் பேசப்பட்ட இன்னொரு முக்கியப் படம் மீண்டும் கோகிலா. கமலுடன் இணைந்து இவர் போட்ட நடிப்பு கதகளியை யாராலும் இன்று வரை மறக்க முடியாது. இந்த கேரக்டரில் ஸ்ரீதேவி பின்னியிருப்பார். கமலே மிரண்டு போன வேடமும் கூட இது
மறக்க முடியாத வாழ்வே மாயம்
1982ல் வெளியான வாழ்வே மாயம், கமல், ஸ்ரீதேவி இருவருக்கும் மறக்க முடியாத படம். சோகம், அழுகை நிறைந்து வழிந்த இப்படத்தின் காதல் காட்சிகளில் கமலும், ஸ்ரீதேவியும் அப்படி மெய் மறக்க வைத்திருப்பார்கள்.
மூன்றாம் பிறை
இருவரது கெரியரிலும் மறக்க முடியாத இன்னொரு முக்கியப் படம் மூன்றாம் பிறை. கமல்ஹாசனுக்கு நடிப்புக்காக முதல் தேசிய விருதை வாங்கிக் கொடுத்த படம் மூன்றாம் பிறை. அப்பாவித்தமான கேரக்டரில் மிரட்டியிருப்பார் ஸ்ரீதேவி.
கொஞ்சம் கூட மிகை இல்லாமல் அவர் நடித்த நடிப்புக்கு இணையாக இன்னொரு நடிகை இதுவரை நடித்ததில்லை. இப்படம் சத்மா என்ற பெயரில் இந்திக்கும் போனது. காலத்தால் மறக்க முடியாத ஜோடி இந்தப் படங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து பெரிய ஹிட் கொடுக்கவில்லை. ஸ்ரீதேவி பின்னர் ரஜினியுடன் பிசியானார். அப்படியே இந்தியில் பெரும் நடிகையாக மாறிப் போனதால் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அதன் பிறகு கை கூடவில்லை. கமல் என்றால் கூடவே ஸ்ரீதேவி என்ற பெயரும் சேர்ந்தே வரும். அப்படி ஒரு நடிப்புப் பிணைப்பில் மூழ்கிப் போனவர்கள் இருவரும் மீண்டும் இணைவார்களா என்று ரசிகர்கள் நீண்ட காலம் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் காலம் ஸ்ரீதேவியை பிரித்துக் கொண்டு போய் அத்தனை பேரையும் ஏமாற்றி விட்டது. இருப்பினும் காலம் உள்ளவரை, கமல் -ஸ்ரீதேவியின் படங்களை ரசிகர்கள் மறக்க முடியாது. பல கோடிப் பெண்களின் உணர்வின் முகம்: வைரமுத்து பல கோடிப்பெண்களின் உணர்வுகளைத் தனது ஒற்றை முகத்தில் பிரதிபலித்தவர் நடிகை ஸ்ரீதேவி. தெற்கில் உதித்து வடக்கை வெற்றி கொண்ட நட்சத்திரம் என்று ஸ்ரீதேவியின் மறைவுக்கான இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து. தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட முண்ணனி நடிகர்களின் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர். தமிழ், இந்தி மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் மிகச்சிறந்த படங்களில் நடித்தவர்.அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உண்டு. பல்வேறு விருதுகளும் அவர் பெற்றுள்ளார். கனவாக இருக்க கூடாதா?.. 80களின் நடிகைகள் இரங்கல்
நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு 80 களில் அவருடன் நடித்த திரையுலக நடிகைகள் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். பலரும் டிவிட்டரில் இதுகுறித்து வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள். ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். லதா, ரேகா, ரோஜா, கஸ்தூரி ஆகிய நடிகைகள் ஸ்ரீதேவி மறைவிற்கு மிகுந்த வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள். |
|
சிவகாசி தந்த பெண் சூப்பர் ஸ்டார்! நினைவுகளும் நினைவஞ்சலிகளும்! ஒரே பார்வையில்!!
207
Spread the love