குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு தலைவராகவும், உப தலைவராகவும் பொறுப்பேற்கவுள்ளவர்களுக்கான கதிரைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அதிகபடியான உறுப்பினர்களை கொண்டுள்ள கட்சியொன்று கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கின்ற போது தெரிவுசெய்யப்படுகின்ற தலைவர் மற்றும் உபத் தலைவருக்கான கதிரைகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன.
கரைச்சி பிரதேச சபையினால் இரண்டு முதிரை கதிரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கதிரைகள் தலைவர் மற்றும் உப தலைவருக்கானது எனவும் கரைச்சி பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர்.