Home இலங்கை “இனியாவது ஒருவிறுவிறுப்பான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடியுங்கள்”

“இனியாவது ஒருவிறுவிறுப்பான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடியுங்கள்”

by admin

ஒரேபார்வையில் முதலமைச்சரின்  3 நிகழ்வுகள்….

பிரியாவிடைநிகழ்வும் இராப்போசனவிருந்தும் இந்தியத் துணைத் தூதுவர் உயர் திரு. A.நடராஜன்

ஃகிராண்ட் ஃகிறீன் பலஸ் மண்டபம்,
ஹொட்டல் ஃகிறீன்கிறாஸ்,யாழ்ப்பாணம்
25.02.2018 ஞாயிற்றுக்கிழமைமாலை 07.00 மணியளவில்
முதலமைச்சர் உரை
இன்றையநிகழ்வின் ஏற்பாட்டாளர்களே, விழாநாயகனாக வீற்றிருக்கும் இந்தியத் துணைத்தூதுவர் உயர்திரு. யு.நடராஜன் அவர்களே, திருமதி. சாந்தி நடராஜன் அவர்களே, இந்தநிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகைதந்திருக்கும் விசேட அதிதிகளே, கௌரவ அதிதிகளே, உயர் அதிகாரிகளே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!

கடந்த மூன்றுஆண்டுகளாக எம்மிடையே இந்தியத்துணைத் தூதுவராகப்பணியாற்றிபதவிஉயர்வுபெற்றுசெல்லுகின்றஉயர்திரு. நடராஜன் அவர்களைவாழ்த்திக் கௌரவிப்பதற்காக நாம் அனைவரும் இங்கு கூடியிருக்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் துணைத்தூதுவர் அலுவலகம் நிறுவப்பட்டகாலத்தில் இருந்து துணைத்தூதுவர்களாக தமிழர்கள் அல்லதுதமிழ் பேசக்கூடிய அதிகாரிகள் இங்கு நியமிக்கப்பட்டமை மிகப் பெரியவரப்பிரசாதமாகும். திரு.நடராஜன் அவர்களுக்குமுன்னர் கடமையாற்றியதிரு.மகாலிங்கம் அவர்கள் மிகச் சாதுவானவர். பேச்சு,நடை,உடை, பாவனை ஆகிய அனைத்திலும் ஒருமென்மையானதன்மை உணரப்படும். ஆனால் திரு.நடராஜன் அவர்கள் மிகஎளிமையானவர். ஆனால்அதேநேரம் எறும்புபோன்றசுறுசுறுப்புக் குணமுடையவர். அவர் கடந்த மூன்று ஆண்டுகளில் வடபகுதி தமிழ் மக்களுக்கு ஆற்றியபணிகள் அளப்பரியன. அதேநேரம் அவர் தெரிந்து வைத்திருக்கும் எம் மக்கட் தொகைகணக்கில் அடங்காதவை.

மிகக் குறுகிய இந்த 03 ஆண்டுகாலஅவரின் இருப்பைகாலாதிகாலமாகநாம்நினைவுகூரக்கூடியவகையில் ஒருவிசாலமானகலாச்சாரமண்டபம் உருவாக்குவதற்கான திட்டங்களைத் தீட்டி அதனை நடைமுறைப்படுத்தியுள்ளார். அதன் கட்டடவேலைகள் 2018ற்குள் முடிவடைந்துவிடும் எனத்தெரிவிக்கப்பட்டது. இவ்வாறானசிறப்பானஒருமண்டபத்தை எமக்கு பெற்றுத்தருவதற்கு மூலகாரணமாக இருந்ததிரு. நடராஜன் அவர்கள் அதனைவைபவரீதியாக திறந்துவைப்பதற்கு முன்பதாகஇடமாற்றம் பெற்றுடெல்கிதலைமைச் செயலகத்தைநோக்கிபயணிக்கவிருப்பதுசற்றுவருத்தத்தைத் தருகின்றது. எனினும் இம் மண்டபம் திறப்புவிழாநடைபெறும் காலத்தில் திரு.நடராஜன் அவர்களும் விசேடஅதிதியாக கலந்துகொண்டுஅந்தநிகழ்வை சிறப்பிப்பார் என்று எண்ணுகின்றேன்.

மேலும் இந்துமக்களின் அனைத்துகலாச்சாரநிகழ்வுகள்,மற்றும்பிரசித்திபெற்றநல்லூர்,கீரிமலைபோன்றஆலயத் திருவிழாக்கள்மற்றும்சிறப்புநிகழ்வுகள் அனைத்திலும் திரு.நடராஜன் அவர்கள் பங்கேற்பார். அப்போதுதமதுபங்கிற்குபல்வேறுகலை, இலக்கிய, இசைவிற்பன்னர்களை இந்தியாவில் இருந்துதருவித்துஎமதுமக்கள்,கலைரசிகர்கள், இலக்கியப் பிரியர்கள் அனைவரும் கண்டுகேட்டு இரசிப்பதற்குவழிசெய்துந்தந்துள்ளார். மேலும் நாம் தொலைக்காட்சிஒளிபரப்புவாயிலாகப்பார்த்துஇரசித்தகலைஞர்களையும் பட்டிமன்றப் பேச்சாளர்களையும்நேரில் பார்த்துஅவர்களின் திறமைகளைக்கண்டுகேட்டு இரசிக்கஏற்பாடுசெய்தபெருமைதிரு.நடராஜனுக்கேஉரியது.

திரு. நடராஜன் அவர்கள் யாழ்ப்பாணத்துத்துணைத்தூதுவராகபதவியேற்றஒருசிலநாட்களுக்குள்ளேயேஇங்கிருந்தமாணவர்களுக்கும் அரசஉத்தியோகத்தர்களுக்கும் பல்வேறுபுலமைப் பரிசில் திட்டங்களைத் தயாரித்தார். அவற்றின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டமாணவர்களையும் உத்தியோகத்தர்களையும் முழுக்கமுழுக்கஇந்தியஅரசின் நிதிஉதவியுடன் இந்தியாவுக்குஅனுப்பிஅவர்களுடையகற்கைநெறிகளைமுழுமையாகபூர்த்திசெய்துகொண்டுமீண்டும் இலங்கைக்குத் திரும்புகின்றகாலவரைக்குஅவர்களுக்கானஒருவிசேடபடியையும் பெற்றுக் கொடுத்தார். இவற்றைஎம்மவர் நன்றியுடன் நினைவு கூருகின்றார்கள்.
இந்தியவெளிவிவகாரஅமைச்சினால் வெளியிடப்பட்டதிரு.நடராஜன் அவர்களின் சேவைகள் பற்றியகுறிப்பைஅவதானித்தபோது32 வருடங்களுக்குமேலாக இவர் வெளிவிவகாரஅமைச்சில் பல்வேறுபதவிகளைவகித்துசீனா, இந்தோனேசியா,பிரான்ஸ்,ஸ்பெயின்,யேமன்,பூட்டான் மற்றும் இலங்கைஆகியநாடுகளில் சிறப்பாகசேவையாற்றியதுதெரியவந்தது. வெளிநாடுகளுடனானஇராஜதந்திரபேச்சுவார்த்தைகளில் திரு.நடராஜன் அவர்களும் முக்கியபங்குவகித்தமைஇத் தருணத்தில் குறிப்பிடற்பாலது. இத்தனைகடமைகளுக்குமத்தியிலும் திரு.நடராஜன் அவர்கள் கோல்ப் (Golf )விளையாட்டிலும்அதிகநாட்டமுடையவர் என்றும் இந்தியாமற்றும் இலங்கையிலுள்ளபல்வேறுகோல்ப் கழகங்களில் கௌரவஉறுப்பினராக இருப்பதும் தெரியவந்தது.  1959 யூன் 17ல் அவதரித்ததிரு. நடராஜன் அவர்கள் சாந்திஅவர்களைமணம் முடித்துஅவர்கள் இருவரிற்கும் பிரியா, பிரபாஎன்ற இரு நற்புத்திரிகள் இருப்பதாகவும் அவர்கள் நல்லநிலைமையில் இருப்பதாகவும்அ றியப்பட்டது.

இந்தியர்களின் மூளை சவர அலகைவிடக் கூர்மையானது என்ற கூற்றுக்கு அமைவாகதிரு.நடராஜன் அவர்களும் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவர். தமதுகாரியங்களை வடபகுதிமண்ணில் ஆற்றுகின்ற போதுமிகக் கவனமாக அரசியல்த் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கிடையே குழப்பங்கள் ஏற்படாத வகையில் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் யாரை அழைக்கலாம்யாரை அழைக்கக்கூடாது என்ற சூட்சுமங்களையெல்லாம் நன்றாகப் புரிந்துவைத்துக் கொண்டு தமதுநடவடிக்கைகளை ஆற்றிச் சென்றார். சிலதடவைகளில் ஒருவிடயம் பற்றிஏற்கனவேநன்கறிந்துகொண்டுஎம்மிடம் தெரியாததைப் போல் கேள்விகேட்பார். இந்தவிதத்தில் அனைவரது கருத்துக்களையும் கிரகித்துவைத்துதனது தொழிலை செம்மையாக ஆற்றிவந்துள்ளார். ஒருமுறைஅவர் என்னிடம் ‘என்னநீங்கள் எங்கள் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வருவதில்லையே. எங்களுடன் ஏதாவதுமனஸ்தாபமா?’என்றுகேட்டார். அப்போதுதான் தெரிந்துகொண்டேன் எனதுவேலைப்பளுக்களின் காரணமாகஅவர் அழைத்தசிலநிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்ளவில்லைஎன்று. அன்றிலிருந்துநான் வேறெங்கேனும் இருந்தாலன்றிதவறாமல் அவர் அழைக்கும் நிகழ்ச்சிகளுக்குவந்துசெல்கின்றேன்.

இத்தனைசிறப்புக்களும் பொருந்தியதிரு.நடராஜன் அவர்கள் ஒருதமிழர் என்றவகையில் தானாடாவிட்டாலும் தன் தசைஆடும் என்றமுதுமொழிக்குஅமைவாக தமிழர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்குதன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டமை நன்றியுணர்வுடன் நினைவு கூரற்பாலது.

எம்மை விட்டு பிரிந்து செல்ல இருக்கும் திரு.நடராஜன் அவர்கள் இந்தியாவில் நியூடெல்கியில் பணிபுரிந்தாலும் எமதுபிரச்சனைகள் தொடர்பாக கூடியகவனங்கள் எடுத்து ஒருசமரசத் தீர்வு ஏற்படுவதற்கு வழிசமைக்கவேண்டும் என்றுகேட்டுக் கொள்கின்றேன். இந்தியஅரசாங்கத்திற்குநான் கூற வேண்டியதை வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் வெகுமதியூடாகக் கூறிவைக்கின்றேன். அண்மைக் காலமாக இலங்கை சம்பந்தமான இந்திய வெளியுறவுக்கொள்கை வெறும் பொருளாதார வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதிலேயே கவனம் செலுத்தியது. இனியாவது ஒருவலிமையான அரசியல் ரீதியான நெருக்குதலை எம் மத்திய அரசாங்கத்திற்குக் கொடுத்து இந் நாட்டில் இணைப்பாட்சியை உண்டுபண்ண வழி அமைக்கவேண்டும். பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் கூட இந்தியாவின் அறிவுரைக்கு ஏற்பதயாரிக்கப்படவில்லை. 1992ம் ஆண்டில் அதில் தரப்பட்டசொற்ப அதிகாரங்களும் மத்திய அரசினால் தட்டிப்பறித்து எடுத்துக் கொள்ளப்பட்டது. இனியாவது ஒருவிறுவிறுப்பான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடியுங்கள் என்று கோரிக்கொள்கின்றேன். நீங்களும் உங்கள் குடும்பத்தவரும் சகல சம்பத்துக்களைப்  பெறவேண்டும், நீடூழிவாழ வேண்டும் என்று பிரார்த்தித்து நீங்கள் யாவரும்  சிறப்புறவாழ உளமார வாழ்த்தி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்ட மக்களின் நலன்கருதி  மாபெரும் நடமாடும் சேவை  கிளிநொச்சி மத்திய கல்லூரி – கிளிநொச்சி
25.02.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணயளவில்
பிரதம அதிதி உரை

குரூர் ப்ரம்மா…………………………………….
இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, வடமாகாண மகளிர் விவகார, சமூக சேவைகள் அமைச்சர் கௌரவ திருமதி அனந்தி சசிதரன் அவர்களே,கௌரவ வடமாகாண சபை உறுப்பினர்களே,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களே,அங்கவீனமுற்றோருக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் திரு.வஜிர கம்புறுகமுவ அவர்களே, முதியோருக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் திரு.சுமிந்த சிங்கப்புலி அவர்களே,சமூக சேவைகள் திணைக்கள அதிகாரிகளே,ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகளே,மற்றும் இன்றைய நிகழ்வில் நன்மைகளைப் பெறுவதற்காக வருகை தந்திருக்கும் சகோதர சகோதரிகளே!
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மக்களின் நலன்கருதி வடமாகாண சமூக சேவைகள் அமைச்சு, கிளிநொச்சி மாவட்ட செயலகம், வடமாகாண சமூக சேவைகள் திணைக்களம், மத்திய அரசின் சமூக சேவைகள் திணைக்களம், அங்கவீனமுற்றோருக்கான தேசிய செயலகம், முதியோர்களுக்கான தேசிய செயலகம் ஆகிய அனைத்து அமைச்சுக்கள், செயலகங்கள், திணைக்களங்களின் பங்குபற்றுதல்களுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள நடமாடும் சேவையை இன்று இங்குதொடக்கி வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் பெருமகிழ்வடைகின்றேன்.

வடமாகாணத்தில் நடந்து முடிந்த கடுமையான யுத்தத்தின் விளைவாக இப் பகுதி மக்களில் மிகக் கூடுதலானவர்கள் குறிப்பாக இளைஞர் யுவதிகள் அங்கவீனர்களாக,உடல் உறுப்புக்களை இழந்தவர்களாக, தமது தொழில் முயற்சிக்கான வழிவகைகள் எதுவுமின்றி திண்டாடிக் கொண்டிருக்கின்ற மாற்றுத்திறனாளிகளாக பலதரப்பட்ட மக்கள் வாடிவதங்கிக் கொண்டிருக்கின்றனர். இம் மக்களில்ப் பலர் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் எனது அலுவலகத்தில் என்னை சந்தித்து தமது துயர சம்பவங்களை எடுத்துக் கூறுகின்ற போது மனம் வெதும்புகின்றது. இவர்களுக்கான உதவிகளை விரைந்து நல்குவதற்கு மனம் ஏவுகின்றது. ஆனால் நிதி நிலைமைகள் ஏற்புடையதாக அமையவில்லை. இருப்பினும் எமக்குக் கிடைக்கக்கூடிய அற்ப சொற்ப நிதிகளில் இருந்து குறிப்பிட்ட சிலருக்கான உதவிகள் வழங்கப்பட்டுவருகின்ற போதும் அவை போதுமானதாக இல்லை என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன். இந்நிலையில் வடமாகாண மகளிர் விவகார சமூக சேவைகள் அமைச்சர் கௌரவ திருமதி அனந்தி சசிதரன் அவர்களின் ஏற்பாட்டின் கீழ் மத்திய அரசில் உள்ள சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து இன்று இந்த நடமாடும் சேவையை முன்னெடுத்திருப்பதுடன் இந்த நிலையத்தில் வைத்தே,

1. மூக்குக் கண்ணாடி வழங்கல்
2. மாற்றுத் திறனாளிகளுக்கான சுயதொழில் உதவி
3. மாற்றுத் திறனாளிகளுக்கான வீடு திருத்தம்
4. மாற்றுத் திறனாளிகளுக்கான மலசலகூட வசதிகளை வழங்கல்
5. மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணம் வழங்கல்
6. மாற்றுத் திறனாளிகளுக்கானபூர்த்தி செய்யப்பட்ட மலசலகூடங்களுக்கான காசோலை வழங்கல்
7. பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான சுயதொழில் உதவி
8. மாற்றுத் திறனாளிகளாக உள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவி
9. முதியோர் அடையாள அட்டைகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளல்
10. நலிவுற்றோருக்கான நிவாரணம், சுயதொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவு

ஆகிய பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருக்கிறது. இம் மக்களுக்கான உதவிகள் இன்று நடைபெறுகின்ற நடமாடும் சேவையில் வழங்கப்படும்உதவிகளுடன் மட்டும் நிறுத்தப்பட்டுவிடக்கூடாது. இவர்களுக்கான உதவிகள் மென்மேலும் வழங்கப்படுவதற்கு நாம் தொடர்ந்தும் பாடுபடவேண்டும். மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் நலிவுற்றோரும் எமது சகோதர சகோதரியினர் என்ற எண்ணம் எம்மிடையே மேலோங்க வேண்டும். கௌரவ அமைச்சர் அவர்கள் இவ் விடயத்தில் மேலும் அவதானத்துடன் செயற்பட்டு இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலுயர்த்துவதற்கு பாடுபடுவார் எனத் திடமாக நம்புகின்றேன். அவர் இங்கு பல வருட காலம் அரச சேவையில் ஈடுபட்டிருந்தவர். மக்களை அறிவார். மக்களின் துயர் அறிவார். மக்கள் பால் அன்பும் கரிசனையுங் கொண்டவர். அப்படியிருந்தும் அவர் மீது அவரின் கட்சி நல்லபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை என்று அறியவருகின்றேன். இதுதான் இன்றைய காலத்தின் கோலம். நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலும் காலத்தின் கோலமே.

நேற்று இதே போன்ற ஒரு நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் முன்னெடுக்கப்பட்டதாக அறிந்தேன். அந்த நிகழ்விற்கும் எனக்கு அழைப்பு விடுவிக்கப்பட்ட போதும் வேறு நிகழ்வுகள் பலவற்றில் கலந்துகொள்ள ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருந்த காரணத்தினால் அந்த நிகழ்வில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. அந்த நிகழ்விற்கு கௌரவ மத்திய அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அவர்கள் கலந்து கொள்வதாக இருந்தது. அவர் வரமுடியவில்லை என்று பின்னர் அறிந்தேன்.

வகைதொகையற்ற மக்களை கொன்று குவிப்பதற்கும் அங்கவீனர்கள் ஆக்குவதற்கும் மூல காரணமாக இருந்த மத்திய அரசு யுத்தம் முடிந்த பின்னரும் இவ்வாறு பாதிப்புக்குள்ளான மக்களுக்கு விரைந்து உதவிகளை நல்க முன்வராதிருப்பது மிகப் பெரிய குறையாக எம் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும் காலம் கடந்தாவது இவ்வாறான மனமாற்றங்களும் நல்ல சிந்தனைகளும் அவர்கள் மனதில் எழுவது ஒரு நல்ல சகுனமாகும். இங்கு வந்திருக்கும் வஜிர கம்புறுகமுவ மற்றும் சுமந்த சிங்கப்புலி அவர்களுக்கும் மற்றைய மத்திய அரச உத்தியோகத்தர்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக! மெஹி பமினீமட்ட தம்ன்ட அபி ஸ்தூதி வந்தவெனவா!

இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாக இனம் காணப்பட்டுள்ளஒரு சமூகம் தமது சுய உரிமைகளுடன்,வாழ்வியல் அடையாளங்களுடன்,சுய கௌரவத்துடன் தமது மண்ணில் வாழ்வதற்கு தடைவிதிக்கக்கூடிய அல்லது தடுத்து நிறுத்தக்கூடிய செயல்களையே மத்திய அரசு தொடர்ந்தும் செய்த கொண்டு வருகிறது.வேண்டுமென்றே தமிழ் மக்கள் பற்றிய அவர்களின் உயரிய சிந்தனைகள் பற்றிய பல தவறான கருத்துக்களை தவறான கோணத்தில் அப்பாவி சிங்கள மக்களுக்கு எடுத்துக்கூறி வருகின்றார்கள் தெற்கத்தைய அரசியல் வாதிகள். இந்த அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளில் சிக்கித்தடுமாறி வருகின்றார்கள் சிங்கள மக்கள். சிங்கள மக்களும் தமிழ் மக்கள் போல் உணர்ச்சிக்கு அடிமையானவர்கள். எனவேதான் சுய இலாபம் கருதிப் பேசும் அரசியல் வாதிகளின் வேற்றுமைப்படுத்தும் பேச்சுக்களை மக்கள் நம்பி விடுகின்றார்கள். உண்மையில் அப்பாவி சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் போட்டி பொறாமை இல்லை. வன்மம் இல்லை. ஆனால் சொந்த இலாபம் கருதி எமது அரசியல் வாதிகள் எமது அப்பாவி மக்களை திசை திருப்பி முரண் வழி நோக்கித் துரத்துகின்றார்கள். இதனால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. மக்களிடையேயான நல்லெண்ணமும் சௌஜன்யமும் சீர்குலைந்துள்ளது. அடாவடித்தனமும் வன்முறையும் மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளன. இந்த நிலை மாற வேண்டும் சிங்கள மக்கள் தமிழ் மக்களின் கரிசனைகளை பிரச்சனைகளை உணர்ந்து கொள்ள நாம் வழிவகுக்க வேண்டும். மனமாற்றத்திலும் புரிந்துணர்விலுந்தான் எமது விடிவு தங்கியிருக்கின்றது.

எனவே உண்மையுடனும் நேர்மைத் தன்மையுடனும் இந்த நாட்டில் எம் மக்கள் வாழக்கூடிய ஒரு சூழ்நில உருவாக வேண்டும். சிறுபான்மை இனங்களின் நலனில் அக்கறை கொள்ளக்கூடிய ஒரு அரசியல் கலாச்சாரம் அல்லது ஆட்சியாளர்களின் மனமாற்றம் ஏற்படும்வரை எமது நிலைமைகளில்முன்னேற்றம் காண முடியாது. ஆகவே அரசுடனான அரசியல்ப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக இனியாவது முன்னெடுக்கப்பட வேண்டும். தகுந்த இணைப்பாட்சி முறை மலர வேண்டும். தமிழ் மக்கள் தமக்குரிய நிலங்களில் தாமே விவசாய முயற்சிகளில் ஈடுபடவும் தமது பகுதிகளில் உள்ள கடல் வளங்களை தாமே பயன்படுத்தவும் தமது தொழில்களில் தாமே தொடர்ந்து ஈடுபடவும், தமது மொழி உரிமையை உரத்துக் கூறக்கூடிய ஒரு சூழ்நிலையைஏற்படுத்தவும்,எமது மக்களை பற்பல நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுப்பதற்கும் நாம் தொடர்ந்துபாடுபடுவோம் என இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்து இன்றைய இந்த நிகழ்வு சிறப்புற அமைய இறைவனைத்தியானித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.
நன்றி.
வணக்கம்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்,
முதலமைச்சர்,
வடமாகாணம்.

யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகும் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களமும், இந்திய ஆயுஸ் அமைச்சும் இணைந்து நடாத்தும் முதலாவது சர்வதேச ஆய்வு மாநாடும் கண்காட்சியும்சித்தமருத்துவ அலகு,யு9 வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
25.02.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில்
பிரதம அதிதி உரை

இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருக்கின்ற யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சு.விக்னேஸ்வரன் அவர்களே, இந்த நிகழ்வை சிறப்பிப்பதற்காக வருகைதந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களே,சித்த வைத்திய பிரிவின் தலைவர் டாக்டர். திருமதி. வி.சத்தியசீலன் அவர்களே, மற்றும் இங்கே வருகைதந்திருக்கின்ற சித்த வைத்திய நிபுணர்களே,இந்தியாவில் இருந்து வருகைதந்திருக்கின்ற சுதேச மருத்துவ விற்பன்னர்களே,மற்றும் துறைசார் அதிகாரிகளே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!

யாழ் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ அலகும், வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களமும், இந்திய ஆயுஸ் அமைச்சும் இணைந்து நடாத்துகின்ற முதலாவது சர்வதேச மாநாடும் கண்காட்சியும் நடைபெறும்மூன்றாம் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.
“Healthy Soul and Body through Nature”  அதாவது இயற்கையினூடான உடல் மற்றும் ஆத்மஆரோக்கியம் என்ற தொனிப் பொருளில் நடைபெறுகின்ற இந்த முதலாவது ஆய்வு மாநாடு காலம் தாழ்ந்தாவது சிறப்பாக நடைபெற்று வருவதுமகிழ்வைத் தருகின்றது.

சித்த மருத்துவம் என்பது முழுக்க முழுக்க மூலிகைகளாலும் மூலிகைக் குணமுடைய மரப்பட்டைகளினாலும் மற்றும் சுகாதாரத்திற்கு உதவக்கூடிய சரக்கு வகைகள் எண்ணெய் போன்றவற்றினாலும்எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாமல் ஆற்றப்படுகின்ற வைத்திய முறைமையாகும்.  இவ் வைத்திய முறைமை இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்மேலை நாட்டு ஆங்கிலேய வைத்திய முறைமைகள் எமது மண்ணில் அறிமுகப்படுத்தப்படாத காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வந்துள்ளது.எம்மிடையே வாழ்ந்த பாரம்பரிய சித்த மருத்துவ வைத்தியர்களினால்பல தீராத நோய்கள் தீர்த்து வைக்கப்பட்டதாக சரித்திரம் எடுத்துக் கூறுகின்றது.ஆகவே சித்த வைத்திய முறைமை என்பது எம்மிடையே காலாதிகாலமாக பின்பற்றப்பட்டுவந்த ஒரு வைத்திய முறைமையாகும். என்னுடைய இள வயதில் சுதேச வைத்தியர்களிடமே நாம் எடுத்துச் செல்லப்பட்டோம். சிகிச்சை பெற்றோம். ஆனாலும் ஆங்கில வைத்திய முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டு மெல்ல மெல்ல ஆசிய நாடுகளில் பரவத் தொடங்கியதும் மக்களுக்கு குடிநீர்களில்,குளிகைகள் விழுங்குகின்ற மற்றும் எண்ணை வகைகளை வெளிப்பூச்சுக்களாக பூசுகின்ற மற்றும் பத்திய உணவு வகைகளைப்பின்பற்றும் செயற்பாடுகளில் ஆர்வம் குன்றத் தொடங்கியது. சிறிய ஒரு இரசாயனக் கலவையைகட்டுப்பாடுகள் இன்றி வெறும் நீரில் விழுங்கி நோய்களை மாற்றுகின்ற வழக்கம் சித்த மருத்துவத்திற்குப் பதிலாகப் பெருகத் தொடங்கியது.புதிய முறையின் இலகு தன்மையை மக்கள் விரும்பியதாலும்,உடனடி நிவாரணியாக இந்த இரசாயனக் கலவைகள் பயன்பட்டதாலும், எமது பாரம்பரிய சித்த வைத்திய முறைமைகளைக்கைவிட்டு மேலைத்தேய வைத்திய முறைமைகளை எமது மக்கள் பின்பற்றத் தொடங்கினர்.

அன்றைய வைத்திய முறைமைகள் ஏட்டுச் சுவடிகளில்செய்யுள் வடிவங்களில் எழுதப்பட்டிருந்தமையினால் அவற்றைப் படித்து விளங்கிக் கொண்டு அந்த வைத்திய முறைகளைத் தொடர்வதற்கு பாரம்பரிய சித்த வைத்திய நிபுணர்களின் அடுத்த சந்ததி சற்று சிரமப்பட்டது. அதற்கடுத்த சந்ததி கடுமையான சிரமங்களை எதிர்நோக்கியது. மூன்றாவது சந்ததி ஏட்டுச் சுவடிகளை தூர வீசி எறிந்துவிட்டு வேறு தொழில்களை நோக்கி நகரத் தொடங்கினர்.எமது பாரம்பரிய வைத்தியர்களும் தமது வைத்திய முறைமைகளை இறக்கும் நாள் வரை பரம இரகசியமாக பேணிப் பாதுகாத்துவிட்டு வாரிசில்லாமல் இறந்த போது அவற்றிற்குத்தொடர்ச்சியில்லாமல் போய்விட்டது. அவிஸ்சாவளை புவக்பிட்டிய என்ற கிராமத்தில் எனது சுதேச வைத்திய சிங்கள நண்பர் ஒருவர் இருந்தார். ஒரு நாள் தனது அலமாரியைத் திறந்து பெருந்தொகையான வைத்திய ஏட்டுச் சுவடிகளை எனக்குக் காட்டினார். நான் வியப்படைந்து இவற்றை நீங்கள் நுண்படம் எடுத்து வருங்கால மக்களுக்கு ஒரு பொக்கிஷமாகக் கையளிக்கலாமே என்றேன். ‘யாரிடம் கையளிப்பது? இது பாரம்பரிய வழியில் வந்த பயபக்தி மிக்க ஒருவரிடமே கையளிக்கப்பட வேண்டும். இல்லையேல் எரித்து சாம்பலாக்கி விட வேண்டும்’ என்றார். பிள்ளைகள் இல்லாத அவர் அவற்றை எரிக்காமல் இருக்க அவரின் மனைவியார் இப்போது அத் தொழிலை நடாத்தி வருகின்றார். நண்பர் இறந்து விட்டார். ஆகவே தக்கவர்களுக்கன்றி எங்கள் பாரம்பரிய அறிவை எல்லோருடனும் பகிரும் பழக்கம் எம்மிடம் இருந்து வந்ததில்லை எனலாம்.

அக் காலத்தில் சுதேச வைத்திய அலகுகளோ அல்லது சுதேச வைத்தியக் கற்கை நெறிகளோ அவற்றிற்கான அரசாங்க ஆதரவுகளோ இந்த வைத்திய முறைமைக்கு அனுசரணையாக இருக்கவில்லை. எனினும் அதில் துறைசார்ந்தவர்கள் எந்தவித உபகரணங்களும் இன்றி வெறுமனே கைநாடி பார்த்து நோயைக் கண்டறிந்துஅவர்களுக்கான வைத்தியங்களை செய்வதில் வல்லவர்களாக இருந்தார்கள். அண்மைக்காலம் வரையில்வைத்தியதொழில் பார்த்த மிகச் சிறந்த மேலைத்தேய வைத்தியர் ஒருவர் மருத்துவப் பேராசிரியராகவும் இருந்த ஒருவர் கை நாடி பார்த்தே எமக்கு சிகிச்சை அளித்தார். ஒரு முறை ‘ளுஉயn தேவையில்லையா’ என்று கேட்டேன். ‘நாடி சொல்லாததையா ளுஉயn சொல்லப் போகின்றது’ என்றார். மேலும் இன்றைய மேலைத்தேய மருத்துவர்களை அவர் ‘இலத்திரனியல் இயக்குனர்கள்’ என்று அழைத்தார். ‘வுhநல யசந ழெவ னுழஉவழசள. வுhநல யசந வுநஉhniஉயைளெ’ என்றார். அவ்வாறு தான் இன்றைய மேலைத்தேய மருத்துவம் சென்று கொண்டிருக்கின்றது. எதற்குமே அறிக்கைகளைக் கோரிக் கொண்டிருக்கின்றார்கள். நோயாளிகளின் பணமோ எக்கச்சக்கமாக செலவழிக்கப்படுகிறது. இரண்டு முறை கொழும்பில் லங்கா ஹொஸ்பிடலில் இருந்ததற்கு எனக்கு இரண்டு மில்லியனுக்கு மேல் செலவாகியது. பெரும்பான்மையான பணம் அறிக்கைகள் பெறவே செலவாகின.

மன்னர்கள் காலத்தில் கூட கைநாடி வைத்தியம் மிகப் பிரபல்யம் பெற்றிருந்தது. இடையிற் சில காலம் மேல்நாட்டு வைத்திய முறைமைகளின் மோகம் எமது மக்களை ஆட்டிப் படைக்க சித்த வைத்திய முறைமைகள் முற்றாக இல்லாது அழிந்து போகக் கூடிய நிலை காணப்பட்டது. நாடி பார்க்கும் பழக்கம் அருகி வந்தது.  எனினும் நாம் அறிந்துகொள்ளாத அல்லது புரிந்து கொள்ளாத எமது வைத்திய முறைகளின் பக்கவிளைவற்ற,உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காத வைத்திய முறைகளை நன்கு புரிந்துகொண்ட மேலைநாட்டவர்கள் தமது தீராத நோய்களுக்கான வைத்திய உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக இந்தியா போன்ற நாடுகளுக்கு படையெடுக்கத் தொடங்கினர். முக்கியமாக முள்ளந்தண்டு எலும்பு,தசைநார்கள்,உடல் உபாதைகள் ஆகியவற்றிற்கான இயன்மருத்துவ (Phலளழைவாநசயிhல) சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு பெருமளவில் நோயாளிகள் எங்கள் நாடுகளுக்கு வந்தார்கள், வருகின்றார்கள்.

அவர்களின் நாட்டில் கிடைத்தஇரசாயனக் கலவைகளை குளிகைகளாகவும்,மருந்துக் கலவைகளாகவும் எமக்கு அனுப்பிவிட்டு தமது தேவைக்கு எமது நாட்டை நோக்கி மூலிகைமருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரத்தொடங்கினர். இந் நிலையில் எமது மருத்துவ துறைகளும் வளர்ச்சியடைய இம் மருத்துவத் துறைகளுக்கான ஒரு தனி அலகு, அதற்கான பல்கலைக்கழக அங்கீகாரம்,அவற்றிற்கான தனியான ஒரு அமைச்சு என வளர்ச்சி பெற்று இன்று மருத்துவ ஆய்வுகளும் ஆய்வரங்கங்களும் சிறப்பான மருத்துவமுறைமைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் பழைய கால ஏட்டுப் பிரதிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை வாசித்து விளங்கக் கூடிய வைத்திய நிபுணர்களை அணுகி அதில் கூறப்பட்ட விடயங்களை எழுத்துருவமாகமாற்றி அச்சுயந்திரம் ஏற்றி புத்தகங்களாக பதிப்பித்து வருகின்றனர். அண்மையில் கூட வடமாகாண சுகாதார அமைச்சு இவ்வாறான ஒரு தொகுதி ஏட்டுச் சுவடிகளை மொழியாக்கம் செய்வதற்காக இந்தியாவில் இருந்து சில விற்பன்னர்களை இங்கு தருவித்து மொழிபெயர்ப்பு செய்ததைஇத்தருணத்தில் நினைவுகூருகின்றேன்.

சித்த மருத்துவத்தின் அண்மைக்கால வளர்ச்சி பல நூற்றுக் கணக்கான மாணவர்களை சித்த மருத்துவத் துறையில் உள் நுழைப்பதற்கும் மருத்துவக் கற்கை நெறிகளை சிறப்பாக நிறைவேற்றி மருத்துவ சேவையில் ஈடுபடவும் வழிவகுத்துள்ளது. அது எமது பாரம்பரிய வைத்திய முறைமைக்கு கிடைக்கப் பெற்ற ஒரு அங்கீகாரம் எனத் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன். எனினும் சித்த வைத்தியம்,ஆயுர்வேத வைத்தியம், சித்தாயுர்வேத வைத்தியம் என்று எமது சுதேச வைத்திய முறைகள் பங்கு போடப்பட்டு போட்டி பொறாமைகளுடன் வளர்ந்து வருவதைக்கண்டு மனவருத்தப்படுகின்றேன். ஒவ்வொரு முறைமையும் ஒன்றில் போட்டியில்லாமல் தனித்தியங்க வேண்டும் அல்லது ஒரே சுதேச வைத்தியம் என்ற நிர்வாக அலகின் கீழ் மூன்றுந் தனித்தனியாகப் பராமரிக்கப்பட்டு வரவேண்டும். வைத்திய முறைமைகளில் போட்டி பொறாமைகளை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். சுதேச வைத்திய முறை சார்ந்த வைத்தியர்கள் எமது அரசியல்வாதிகள் போல் முரண்பட்டுக் கொள்வது சகிக்க முடியாமல் இருக்கின்றது.

உடலுக்கான மருத்துவம், எலும்புகளுக்கான மருத்துவம், வெளிப்பூச்சு மருத்துவம் என பல மருத்துவ முறைமைகள் பற்றியும் சித்த மருத்துவ முறைகளுடன் இணைந்த யோகப் பயிற்சி முறைமைகள்பற்றியும் இம் மகாநாட்டில் ஆராயப்பட இருக்கின்றது. சித்த மருத்துவ குளிகைகளுக்கான தகைமைகள் பற்றியும் அவற்றிற்கானநியம அளவுகள் பற்றியும் (Quality Control and Standarization)  ஆராயவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.தொற்றா நோய்களுக்கான நவீன மருத்துவ முறைகள் பற்றியும் இந்த மாநாட்டில் ஆராயப்படவிருப்பதாகத்தெரிவிக்கப்பட்டது.

உண்மையிலேயே எமது நாடுகளிலிருந்தே பல கலை வடிவங்கள் பிறநாட்டாரால்திருடிச் செல்லப்பட்டு இன்று அவர்களின் நாட்டு கலைவடிவங்களாக அவை எமக்கு எடுத்துக் காட்டப்படுகின்றன. குங்பு மற்றும் கராத்தே தற்காப்புக் கலைகள் கூட இந்திய மண்ணில் இருந்து சீனர்களாலும் மற்றும் ஐரோப்பியர்களாலும் எடுத்துச் செல்லப்பட்ட தற்காப்புக் கலை வடிவங்களாவன. எமது நாடுகளில் காணப்பட்ட வைரங்கள், வைடூரியங்கள், இரத்தினங்கள் மற்றும் இன்னோரன்ன விலைமதிப்பற்ற கற்கள், வாசனைத்திரவியங்கள், பூச்சுத் திரவியங்கள் அனைத்தும் மேலை நாட்டவர்களால் அபகரித்துச் செல்லப்பட்டு இன்று மீண்டும் எமக்கு விலை பேசப்படுகின்றன.உள்நாட்டு மருத்துவமும் பிறநாட்டவரால் அபகரித்துச் செல்லப்படுவதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முன்னர் இவற்றை அறியாமல்ப் பறிகொடுத்தோம். இப்போது பணத்துக்காக அறிந்தும் பறிகொடுத்து வருகின்றோம். எனவே எமது கலைகளை, பாரம்பரிய வைத்திய முறைகளை நாம் தான் காப்பாற்ற முன்வர வேண்டும். வேற்று இனத்தார் இதைச் செய்ய முன்வரமாட்டார்கள்.

ஆகவே அன்பார்ந்த சுதேச மருத்துவர்களே,துறைசார் விற்பன்னர்களே!எமது வைத்திய முறைமைகள் பற்றி மேலும் மேலும் ஆராயுங்கள்.அவற்றின் பாவனையை முடிந்த அளவு இலகுபடுத்துங்கள்.எமது வருங்கால சந்ததியினர்எதுவித பக்க விளைவுமற்ற,உடலுக்கு நன்மை பயக்கக் கூடிய சுதேச மருத்துவ உதவியுடன் தொற்று நோய், தொற்றா நோய்த்தாக்கங்களில் இருந்து விடுபட்டு ஒரு ஆரோக்கியமான சமூகமாக வளர்ந்து, வாழ்ந்து வரவாழ்த்துகின்றேன். உங்கள் கருத்தரங்குகண்காட்சியும் சிறப்புற நடைபெற எனது வாழ்த்துக்களையும் ஆசிகளையுந் தெரிவித்து விடைபெறுகின்றேன்.

நன்றி
வணக்கம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More