குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மீளவும் அமெரிக்கா தடைகள் விதிக்கப்பட்டமை தொடர்பில் வடகொரிய அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. மேலும் கொரிய தீபகற்பத்தில் பதற்ற நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது என வடகொரிய அரச ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்தநிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது.
அதேவேளை வடகொரியாவின் சிரேஸ்ட அதிகாரிகள் தென்கொரியாவிற்கு சென்றுள்ளனர். குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு நிகழ்வில் பங்கேற்பதற்காகவே இவ்வாறு வடகொரியாவின் உயர் மட்ட அதிகாரிகள் தென்கொரியாவிற்கு சென்றிருந்தனர். இந்தப் பிரதிநிதிகள், தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜா இன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.