பப்புவா நியூ கினியாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. 35 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. எனினும், நிலநடுக்கம் மையம் கொண்ட பகுதிக்கு அருகில் உள்ள எண்ணெய்நி றுவனங்கள் உடனடியாக பணிகளை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹைட்ஸ் என்ற எரிவாயு ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டு ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் எனினும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதாகவும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் சேத விவரங்கள் எவையும் வெளியாகவில்லை