187
ஐபிஎல் தொடரின் 2018ஆம் ஆண்டுக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல்லின் 11-வது தொடர் எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலத்தில் அணிகளுக்கான வீரர்கள் கடந்த மாதம் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக அஸ்வின் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அஸ்வினை 7.6 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love