குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீண்டும் உறவினர்களுடன் சேர்ந்துகொள்ள நாங்கள் பிரார்த்திப்போம் என யப்பான் நாட்டைச் சேர்ந்த பௌத்த துறவிகள் தெரிவித்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான சர்வமத வழிபாட்டு ஊர்வலம் மேற்கொள்ளும் குழு இன்று(26) கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 372 நாட்களாக தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை குறித்த குழுவினர் ,ன்று பகல் சந்தித்து வழிபாட்டினையும் முன்னெடுத்தனர்.
ஜப்பான், ஐரோப்பா, இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பௌத்த துறவிகள் குறித்த மக்களை சந்தித்தனர். உலக அமைதி பணியில் ‘நிப்பொன்சன் மியொஹொஜி’ ஜப்பான் புத்த துறவிகளே இன்று அம்மக்களை சந்தித்து பேசியதுடன், விசேட வழிபாட்டினையும் முன்னெடுத்திருந்தனர்.