Home உலகம் குளிர்கால ஒலிம்பிக் ஐஸ் ஹொக்கி போட்டியில் என்.எச்.எல் வீரர்கள் பங்கேற்காமை போட்டியின் தரத்தை பாதித்துள்ளது

குளிர்கால ஒலிம்பிக் ஐஸ் ஹொக்கி போட்டியில் என்.எச்.எல் வீரர்கள் பங்கேற்காமை போட்டியின் தரத்தை பாதித்துள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஐஸ் ஹொக்கி போட்டிகளில் என்.எச்.எல் வீரர்கள் பங்கேற்காமை போட்டியின் தரத்தை பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நசனல் ஹொக்கி லீக் எனப்படும் என்.எச்.எல் போட்டித் தொடரிலேயே மிகவும் சிறந்த ஐஸ் ஹொக்கி வீரர்கள் விளையாடி வருகின்றனர். எனினும் இம்முறை குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் என்.எச்.எல் வீரர்கள் பங்கேற்கவில்லை. இதன் காரணமாகவே ரஸ்யாவும் ஜெர்மனியும் இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டன.

விளையாட்டு வீரர்கள் பயணக் கொடுப்பனவு, காப்புறுதி உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் என்.எச்.எல் நிர்வாகத்திற்கும் ஒலிம்பிக் கமிட்டிக்கும் இடையில் இணக்கம் ஏற்படுத்திக் கொள்ளாமையே வீரர்கள் இம்முறை குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்காமைக்கான காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது. எனினும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான தரமான வீரர்கள் ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்க வேண்டியது மிகவும் அவசியமானது என தெரிவிக்கப்படுகிறது.

GANGNEUNG, SOUTH KOREA – FEBRUARY 14: Jan Mursak #39 of Slovenia scores a game winning goal against Ryan Zapolski #30 of the United States in overtime of the Men’s Ice Hockey Preliminary Round Group B game on day five of the PyeongChang 2018 Winter Olympics at Kwandong Hockey Centre on February 14, 2018 in Gangneung, South Korea. (Photo by Ronald Martinez/Getty Images)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More