குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
அமைச்சரவை மாற்றம் தீர்வாக அமையாது எனவும், நாட்டில் நிலவி வரும் அரசியல் பிரச்சினைக்கு அமைச்சரவை மாற்றம் தீர்வாக அமையாது எனவும், அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை மாற்றம் தொடர்பில் திருப்தி கிடையாது என தெரிவித்த அவர், மக்களின் அபிலாஸைகளை புரிந்து கொண்டு தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
வரட்சி காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு அவசர நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமெனவும், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இவஹவாறு குறிப்பிட்டுள்ளார்.