167
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானம் நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூர் நோக்கி பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்தவுடன், லொஹான் ரத்வத்த, செயலாளர் உதித லொக்கு பண்டார உள்ளிட்ட 6 பேர் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை, இன்று இரவே மஹிந்த மீண்டும் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெங்களூர் செல்லும் மகிந்த திருப்பதி தரிசனத்திற்கு செல்வார் எனவும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திப்பார் எனவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love