தமிழகத்தில் புதிய வாக்காளர் சேர்ப்பு, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் தற்போது இரட்டைப் பதிவுகள், இறந்த வாக்காளர்கள் பெயர்கள் இடம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 10-ம் திகதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதன்படி, தமிழகத்தில் 5 கோடியே 86 லட்சத்து 84 ஆயிரத்து 541 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்போது இரட்டைப்பதிவுகள், இறந்தவர்கள் என 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் கள ஆய்வுக்குப் பின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தன்.
இந்நிலையில், தற்போது வரை இடம்பெற்ற பெயர் சேர்த்தல், இணைய மூல பதிவுகள் போன்ற னமூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் இரட்டை பதிவாக இடம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதென தேர்தல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பட்டியல் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளதெனவும் இது தொடர்பில் கள ஆய்வு மேற்கொண்டு, இரட்டை பதிவு இருப்பது கண்டறியப்பட்டால், அவர் இருக்கும் இடத்தை விடுத்து மற்றொரு இடத்தில் பெயர் நீக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளர்.