160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு மாகாண சபையிற்கு இரண்டு பதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றைய சபை அமர்விற்கு வந்திருந்த போது அவர்களுக்கு முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ; கைலாகு கொடுத்து வரவேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்
மாகாண சபையின் 117 ஆவது அமர்வு கைதடியிலுள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்றது. இதன் போது புதியதாக நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்களும் சபைக்கு அவைத் தலைவரால் அழைக்கப்பட்டார்.
சுபைக்கு வந்த உறுப்பினர்கள் அவைத் தலைவரிடம் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உறுப்பினர்கள் கைலாகு கொடுத்து வரவேற்று வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். இதன் பின்னர் தமதுகன்னியுரைகளையும் ஆற்றியிருந்தனர்.
இதே வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சபாரட்ணம் குகதாஸ் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அப்துல் நியாஸ் அகமட் ஆகிய இரண்டு உறுப்பினர்களுமே புதிதாக நியமிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love