ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தலிபான் தீவிரவாத இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானின் காபுல் உள்பட பல பகுதிகளில் தலிபான் தீவிரவாத இயக்கத்தினர் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டு வருவதனால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில் தாலிபான்களை வேரோடு அழிக்கும் வரை அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் என அnரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச தாலிபான் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. 25 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற தீவிரவாத தடுப்பு மாநாடு காபுல் நகரில் இடம்பெற்ற மறுநாள் தலிபான் அமைப்பு இப்படி ஓர் அழைப்பை விடுத்துள்ளது.
முன்னரும் அமெரிக்காவுடன் பேச தயாராக இருப்பதாக தலிபான்கள் தெரிவித்திருந்த போதும் அந்த அமைப்புடன் பேச தயாராக இல்லை என டிரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.