ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில முதலமைச்சர் மெகபூபா முப்தி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசியுள்ளார். கடந்த 2017-ல் 525 முறை பாகிஸ்தான் தீவிரவாத ஊடுருவல் முயற்சி நடைபெற்றபோது இந்திய ராணுவம் பதில் தாக்குதல் மேற்கொண்டதில் 75 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்தும் பாகிஸ்தான் ராணுவமும் எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 6 ராணுவத்தினரும் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த மெகபூபா முப்தி அங்கு நிலவும் பாதுகாப்பு நிலவரம் குறித்து எடுத்துக் கூறியதாகக் தெரிவிக்கப்படுகின்றது
மேலும் மத்திய அரசின் சிறப்புப் பிரதிநிதி காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.