201
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் இரசாயன ஆயுத உற்பத்திக்கு வடகொரியா உதவிகளை வழங்கியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரசாயன ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான பொருட்கள் மற்றும் உபகரணங்களை வடகொரியா, சிரியாவிற்கு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர்களை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளன.
சிரியாவில் அண்மையில் படையினர் குளோரின் எரிவாயுவைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத அணுவாயுத உற்பத்தியில் ஈடுபடுவதற்காக வடகொரியா மீது சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love