Home இலங்கை அர்ஜுன மகேந்­தி­ர­ன் சிங்கப்பூர் முகவரியில் இல்லை, அழைப்பாணை திரும்பியது…

அர்ஜுன மகேந்­தி­ர­ன் சிங்கப்பூர் முகவரியில் இல்லை, அழைப்பாணை திரும்பியது…

by admin

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்­தி­ரன் சிங்கப்பூரில் வசித்து வந்த முக­வ­ரிக்கு, கோட்டை நீதிவான் அனுப்­பிய அழைப்பாணை உத்­த­ரவு மீள திரும்பி வந்­துள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் முன்­னி­லையில் எதிர்­வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி அல்­லது அதற்கு முன்­ன­தாக முன்னிலையாகுமாறு மத்­திய வங்கி பிணைமுறி மோசடி விவ­கா­ரத்தின் பிர­தான சந்­தேக நப­ரான அர்ஜுன மகேந்­தி­ரனுக்கு உத்தரவு அனுப்பட்டிருந்த போதும் குறித்த முக­வரியிலுள்ள வீட்டில் அவர் தற்­போது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர் முக­வ­ரியை மாற்றி தலை­ம­றை­வா­கி­யுள்­ள­மை குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந் நிலையில் அர்ஜுன மகேந்­திரன் மார்ச் மாதம் 8 ஆம் திக­திக்குள் இலங்­கைக்கு வந்து குற்றப் புல­னா­ய்வுப் பிரிவில் முன்னிலையாவது சாத்­தி­ய­மில்லை என்­பதால், அவர் தொடர்பில் முன்­னெ­டுக்­கத்­தக்க அடுத்த கட்ட நட­வ­டிக்கை தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரிவும் சட்ட மா அதிபர் திணைக்­கள அதி­கா­ரி­களும் ஆராய்ந்து வரு­கின்­றனர் எனவும் பெரும்­பாலும் அவரைக் கைது செய்ய சர்­வ­தேச காவல்துறையினருக்கு சிவப்பு அறி­வித்­தலை நீதி­மன்றம் ஊடாக விடுப்­பது தொடர்பில் அவ­தானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 ஏற்­க­னவே கடந்த  பெப்­ர­வரி மாதம்  15 ஆம் திக­திக்கு முன் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு  நீதி­மன்றம் அர்ஜுன மகேந்திரனுக்கு  அறி­வித்­தலை சர்வதேச  காவற்துறை  ஊடாக அனுப்­பி­யி­ருந்த போதும் அது தொடர்பில்  உள்ள நடைமுறை சிக்கல் கார­ண­மாக அது சாத்­தி­யப்­ப­ட­வில்லை.

 எவ்­வா­றா­யினும் அர்ஜுன மகேந்தி­ரனின் தொலை­பேசி இலக்கம் என நம்­பப்­படும் இலக்­கத்தை விசா­ர­ணைகள் ஊடாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் பெற்­றி­ருந்த நிலையில், குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவிப் பணிப்­பாளர் காவற்துறை அத்­தி­யட்சகர் பி.அம்­பா­வில நேற்றுக் காலை வரை அவ்­வி­லக்­கத்­துக்கு அழைக்க முயற்சித்த  போதும்,  அவ்­வி­லக்கம் பாவ­னையில் இருக்கவில்லை.  எவ்­வா­றா­யினும் கடந்த 15 ஆம் திக­திக்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என்­பதை அர்ஜுன மகேந்திரன் அறிந்­தி­ருந்தார் என்­பதை சி.ஐ.டி. உறுதி செய்­தி­ருந்­தது.

சர்வதேச  காவற்துறையினரின்  சட்ட விதி­களில் 10.1 ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக நீதி­மன்ற அறி­வித்­தலை கைய­ளிக்க முடி­யாது என அறி­வித்­தி­ருந்த நிலையில், இலங்­கை­யுடன் உள்ள தொடர்பு கார­ண­மாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து அர்ஜுன மகேந்திரன் குறித்த சிங்­கப்பூர் முக­வ­ரியில் வசிப்­பதை உறுதிசெய்துள்ளனர்.  அதன்படியே அந்த முகவரிக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில்  அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்ய சிவப்பு அறிவித்தலை பெற குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியகி உள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More