இலங்கையில் எதிர்வரும் மார்ச் 6ம் திகதி முதல் நடைபெறவுள்ள முத்தரப்பு இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டித் தொடரில் இருந்து இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் விலகியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அணித்தலைவராக நியமிக்கப்பட்ட மத்யூஸ் பங்களாதேசுடனான தொடரின் காயம் காரணமாக விலகியிருந்தார்.
இந்நிலையில் முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்ட போது காலின் பின்புற தசை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக குறித்த இருபதுக்கு இருபது தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் டெஸ்ட் அணியின் தலைவரான தினேஷ் சந்திமால் அணியை வழிநடத்தக்கூடும் என கருதப்படுகிறது. . இந்த முத்தரப்பு போட்டியில் இலங்கை, இந்தியா, பங்களாதேஸ் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது