188
எகிப்தின் பெஹேய்ரா(Beheira) மாகாணத்தில் பயணிகள் புகையிரதத்தின் இரண்டு பெட்டிகள் தனியே கழண்டு சரக்கு புகையிரதம் ஒன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மக்கள் எகிப்தில் புகையிரத போக்குவரத்தில் எப்போதுமே பாதுகாப்பு நடைமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுவது இல்லை என தெரிவித்துள்ளனர். கடந்த வருடமும் இதே போன்றதொரு புகையிரத விபத்தில் 42 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love