நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாண்டுகால ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்ரியா பிறிலண்ட் (chrystia freeland) தெரிவித்துள்ளார். மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரின் நேற்றைய அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாண்டுகால ஆட்சியில் எந்தவித முன்னேற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐ.நா மனித உரிமை பேரவையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளயும் மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டிய அவர் சமாதானம் , நல்லிணக்கம் ,பொறுப்புக்கூறல் ,அரசியல் தீர்வு போன்றவிடயங்களில் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்படுவது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.