149
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொள்கை ரீதியான மாற்றங்களையே எதிர்பார்ப்பதாக அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வெறும் தலைகளை மாற்றியமைப்பதனால் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது மக்கள் இதனை தெளிவாக உணர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்வதனால் ஆட்சியில் மாற்றம் வந்து விடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love