குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கைகளினால் சாதக நிலைமைகளும் பாதக நிலைமைகளும் ஏற்படக் கூடுமென சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் லகார்டே தெரிவித்துள்ளார். வரிக் குறைப்பானது அமெரிக்காவின் வளர்ச்சியை சற்று தாமதப்படுத்தும் என தெரிவித்துள்ள அவர் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி வீதமான உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கார்பிரேட் துறையினருக்கான வரிகள் 35 வீதத்திலிருந்து 21 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது எனினும், இந்த நடவடிக்கையானது பண வீக்கத்தை அதிரிக்கக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். லகார்டே தற்போது இந்தோனேசியாவிற்கான அதிகாரபூர்வ பயணத்தினை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.