தேசிய அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தின் இரண்டாவது அத்தியாயம் எதிர்வரும் 7ம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் மக்களை வீதியில் இறக்கி பேரணி நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு முதுகெலும்பு இருக்குமாயின் இவர்களும் நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அதுவே அவர்களுக்கான இறுதிச் சந்தர்ப்பமாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் பத்தரமுல்லவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்டபிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊள்ளுராட்சித்தேர்தலின் பின்னர் பிரதமரை பதவி விலகி புதிய அரசாங்கம் நியமிக்கப்பட வேண்டும் என தாங்கள் கோரிய போதும் அது நடைபெறவில்லை எனத் தெரிவித்த அவர் உள்ளூராட்சி மன்றங்களை அமைக்க முடியாத நிலையக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்
இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை வீடடுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அதற்காக மக்களை வீதியில் இறக்கி பேரணி நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் கைது செய்யப்பட்டால் அனைத்து விடயங்களும் அம்பலமாகும் என்பதனால் அவரை பிரதமர் பாதுகாப்பதற்கு முயற்சிக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார். எனவே பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணையை ஐக்கிய தேசியக்கட்சி கொண்டு வந்தால் கூட்டு எதிர்க்கட்சி அதற்கு ஆதரவினை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.