இலங்கையில் துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கு இந்தியா ஆர்வம் காட்டவில்லை எனவும் அதனாலேயே சீனாவின் உதவியை நாடவேண்டி ஏற்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான பயணத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் போது இந்தியாவின் பெங்களு}ரில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் ஹம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைக்கும் நோக்கிலேயே இந்தியா இருந்தது எனவும் யுத்தகாலத்திலேயே குறித்த கோரிக்கையினை தாம் முன்வைத்திருந்ததாகவும் அதனை இந்தியா நிராகரித்தமையினால்தான் சீனாவிடம் வழங்கினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முக்கியத்துவம் பற்றி தமக்கு நன்கு தெரியும் என்பதாலேயே அதனை தாங்கள் முன்னெடுக்க தயாரானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் தேசிய சொத்துக்களை விற்பனை செய்து வருவதாகவும் தாம் தனியார் மயமாக்கலுக்கு எதிராக செயற்பட்டதாகவும் தனியார் மயமாக்கலினால் நாடம்டைக் கட்டியெழுப்ப முடியும் என தான் எதிர்பார்க்க வில்லை எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை இந்தியாவுடன் சிறந்த உறவைப் பேணி வந்ததாகவும் எனினும் கடந்த காலங்களில் தவறான புரிதல்கள் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் உள்ளு}ராட்சி மன்ற தேர்தல்களில் தாம் வெற்றி பெற்று மக்கள் ஆணையைப் பெற்றுள்ளதாகவும் எனினும் இதனை தாம் ஆட்சியமைக்கும் தேர்தலாக கருதவில்லை எனவும் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்