157
ராஜாங்கனை ஒன்றிணைந்த விவசாய அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார் நேற்று மாலை அவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்திய மேலும் பலரை கைது செய்யவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் குடிநீர் திட்டத்தை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் 50 பேர் கைது செய்யப்பட்டு இம்மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love