155
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடையை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் 20 முதல் ஏப்ரல் 30ம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது . 2015ம் ஆண்டு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி சீல் துணிகளை விநியோகம் செய்தமை தொடர்பில் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பி ஆகியோர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love