2400 குளங்களைப் புனரமைக்கும் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது. நீண்டகாலமாக புனரமைப்புச் செய்யப்படாத வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலுள்ள 2400 புராதன குளங்கள் இந்த செயற்திட்டத்தின் ஊடாக புனரமைப்புச் செய்யப்படவுள்ளதுடன், பொலன்னறுவை மாவட்டத்தில் 123 குளங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இச் செயற்திட்டத்தின் கீழ் புனரமைப்புச் செய்யப்படவுள்ள முதலாவது குளமான மின்னேரிய, ஹிங்குராங்கொட பிரதேசத்திலுள்ள சந்தனபொக்குன குளத்தின் புனரமைப்புப் பணிகள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது.
புராதன அரச காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இக்குளத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு நீர் விநியோகிக்கப்படுகின்றது. 800 சதுர அடிகள் பரப்புடைய நீர்க் கொள்ளளவினை கொண்ட இந்த வாவியினால் பிரதேசத்தின் 300 விவசாயக் குடும்பங்கள் நன்மை அடைகின்றன.
; இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன் இந்த புனரமைப்புச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது