ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட 84 தமிழர்களும் பிணைத்தொகை கட்டிய பின்னர் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
செம்மரங்களை வெட்டிக்கடத்துவதற்காக சென்றதாக ஆந்திராவில் 84 தமிழர்கள் கைது
Mar 2, 2018 @ 13:14
ஆந்திர காட்டுப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டிக்கடத்துவதற்காகச் சென்றதாகக் கூறப்படும் தமிழகத்தைச் சேர்ந்த 84 பேரை இன்று அதிகாலை ஆந்திர காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். சென்னையிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ள ஆஞ்சநேயபுரம் என்ற இடத்தில் செம்மரங்களை வெட்ட கூலித் தொழிலாளர்கள் தமிழகத்திலிருந்து செவ்லதாக கிடைத்த தகவலை அடுத்து, செம்மர கடத்தல் தடுப்பு காவல்துறையினர், ஒரு பாரவூர்தியை துரத்தச் சென்று அவர்களைக் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் தற்போது காவல்துறை விசாரணை நடத்திவருகிறதெனவும் கைதுசெய்யப்பட்டவர்களில் பலர் பட்டப்படிப்பும் பட்ட மேற்படிப்பும் படித்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். செம்மரங்களை வெட்டச்சென்றதாகக் கூறி, ஆந்திராவில் கைதுசெய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் ஆந்திரச் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாக பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
அத்துடன் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது