பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் கே.டி.நவீன்குமார் என்பவர் முக்கியப் பங்காற்றியதை உறுதிசெய்யப்பட்தனை அடுத்து அவரை சிறப்பு புலனாய்வுக்குழு கைது செய்துள்ளது அவரை ஒரு வலுவான சந்தேகத்திற்குரியவர் என விவரித்துள்ள புலனாய்வுத் துறையினர் அவரது அழைப்புப் பதிவுகள் தீவிரவாத இந்துத்துவா குழுவுடன் தொடர்புபடுத்தியதை சுட்டிக் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளன. மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார் கெம்பகவுடா பேருந்துநிலையம் அருகே கடந்த பெப்ரவரி 18-ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்ட நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரிடம் இருந்து கைப்பற்றிய தோட்டாக்கள் கவுரியை கொல்ல பயன்படுத்திய தோட்டாக்களும் பொருந்தக்கூடிய வடிவம் கொண்டது என ஆயுதத் துப்பாக்கி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவரது அவரது உடைமைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த வருடம் செப்டம்பர் 5-ம் திகதி தனது வீட்டுக்கு வெளியே பத்திரிகையாளர் மற்றும் செயற்பாட்டாளரான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது