175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் மூலம் கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று(03) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. காலை பத்து மணிக்கு கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற இச் செயலமர்வில் உள்ளுராட்சி முறைமையும்,நல்லாட்சியை உறுதிப்படுத்தலும் எனும் தொனிப்பொருளில் மக்கள் கௌரவத்திற்கும் உரிமைக்குமான நிறுவகம் ஏற்பாடு செய்திருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கு அனைத்துக் கட்சிகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகள் இச் செயலமர்வில் கலந்துகொண்டனர்.
Spread the love