குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் பதவி மாற்றங்கள் தொடர்பில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் முதல் கட்ட அமைச்சரவை மாற்றங்கள் ஐக்கிய தேசியக் கட்சி;க்குள் இடம்பெற்றது. இதேவிதமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்களுக்கு இடையிலும் அமைச்சுப் பதவி மாற்றங்கள் நடைபெறவிருந்தன.
எனினும், அமைச்சர்கள் சிலர் பதவிகளை விட்டுக் கொடுக்கவோ புதிய பதவிகளை ஏற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை.
இதனால் அமைச்சரைவயில் மாற்றம் செய்வதில் ஜனாதிபதிக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஸவிற்கு நெருக்கமான தரப்பினர் புதிய அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.