அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜோர்ஜ் கோரோனஸ் (George Corones) என்பவர் 99 வயதில் ப்ரீஸ்டைல் ( free style) பிரிவில் 50 மீட்டர் தூரத்தை 56.12 விநாடிகளில் நீந்தி சாதனை படைத்துள்ளார். கடந்த பிப்ரவரி அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லண்ட் நகரில் நடைபெற்ற கொமன்வெல்த் நீச்சல் போட்டிக்கான தகுதிப் போட்டியில் 100 முதல் 104 வயது வரை உள்ளவர்களுக்கான பிரிவில் இவர் சாதனை படைத்துள்ளார்.
2014-ம் ஆண்டு இதே பிரிவில் கனடாவை சேர்ந்த நீச்சல் வீரர் பிரிட்டன் ஜோன் ஹரிசன் 50 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் 31.19 விநாடிகளில் கடந்ததே இதுவரை உலக சாதனையாக இருந்து வந்துள்ளது. தான் சிறிய வயதில் நீச்சல் பயிற்சி எடுத்த தான் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அதை விட்டுவிட்டதாகவும் 80 வயதில்தான் மீண்டும் நீச்சலில் ஆர்வம் வந்தது எனவும் ஜோர்ச் தெரிவித்துள்ளார்