சர்வதேச நாணய நிதியம் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணநாயாக்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கப் பெற வேண்டிய சேவைகள் ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தற்போது இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எவ்வித பணிகளும் எஞ்சியில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளுக்கு அமைய செயற்பட வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என தெரிவித்துள்ள அவர் சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
15 வீத பெறுமதி சேர் வரி யோசனையை சர்வதேச நாணய நிதியமே பரிந்துரை செய்தது எனவும் ரவி கருணாநாயக்க
குறிப்பிட்டுள்ளார்.