210
சென்னையில் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலையை நடிகர் ரஜினிகாந்த் இன்று திறந்து வைத்துள்ளார். சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள தாய்மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஏனைய சில கல்லூரிகளின் 30-ம் ஆண்டு விழா இன்று ஆரம்பமாகியிருந்தது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்ததுடன் எம்.ஜி.ஆர் பெயரிலான விருதுகளையும் வழங்கியுள்ளார்.
Spread the love