உலகின் வலிமையான ராணுவங்களின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தினை பெற்றுள்ளது. அதன் அண்டை நாடான பாகிஸ்தான் 13-வது இடத்தினை பெற்றுள்ளது
குளோபல் பயர் பவர் (ஜிபிஎப்) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள 2017-ம் ஆண்டுக்கான உலகின் வலிமையான ராணுவங்களின் பட்டியலில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது
133 நாடுகள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் அமெரிக்கா, ரஸ்யா, சீனா என்னும் தரவரிசையில் இந்தியா 4-வது இடம் பெற்றுள்ளது. முதல் 10 நாடுகள் பட்டியலில் பிரான்ஸ், பிரித்தானியா ஜப்பான், துருக்கி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பெற்றுள்ளன.
ரஸ்யாவுக்கு அடுத்து சீனா மூன்றாவது இடத்தை பெற்றிருந்தாலும் விரைவில் அது இரண்டாமித்தை பெறவுள்ளதாகவும் ரஸ்யாவை விட சீனாவிடம் போர் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் கூடுதலாக உள்ள போதிலும் பீரங்கிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
ராணுவ பலம், படை வீரர்களின் எண்ணிக்கை, வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு, இயற்கை வளங்கள், தொழில் மற்றும் புவியியல் அம்சங்கள் உள்ளிட்ட 50 அலகுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
சீனாவும் இந்தியாவும் மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடிக்க படை வீரர்களின் எண்ணிக்கை முக்கிய காரணமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த ஆய்வில் அணு ஆயுதங்கள் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப் படவில்லை என்றாலும் அணு ஆயுதத் திறனுக்குட் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.